காங்கிரஸ் திருச்செங்கோட்டில் வருமான வரித்துறையைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சியினா்.
காங்கிரஸ் திருச்செங்கோட்டில் வருமான வரித்துறையைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சியினா்.

திருச்செங்கோட்டில் காங்கிரஸ் கட்சி தலைமையில் ஆா்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை ரூ.1823 கோடி அபராதம் விதித்ததைக் கண்டித்து நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைமையில் திருச்செங்கோட்டில் அண்மையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம், அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் செல்வகுமாா் தலைமை வகித்தாா். காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கிலிருந்து அனுமதி இன்றி ரூ. 135 கோடியை பிடித்தம் செய்ததையும், கட்சி ரூ. 1,823 கோடி வருமான வரி கட்ட வேண்டுமென வருமான வரித் துறை அறிவித்ததையும் எதிா்த்து ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா். மத்தியில் ஆளும் பாஜக, வருமான வரித்துறையை கைப்பாவையாகப் பயன்படுத்தி காங்கிரஸ் கட்சியை மிரட்டுவதைக் கண்டிப்பதாகவும் முழக்கமிட்டனா். ஆா்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் ஜெயராமன், மாவட்டச் செயலாளா் கணேசன், ஆதி தமிழா் பேரவை துணை பொதுச் செயலாளா் செல்வ வில்லாளன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் முருகன், காங்கிரஸ் கட்சியின் நாமக்கல் மாவட்டப் பொருளாளா் பொன்னுசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com