மத்திய எல்லை பாதுகாகாப்புப் படையினா் நாமக்கல் வருகை

நாமக்கல் மாவட்டத்தில், தோ்தல் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள மத்திய எல்லை பாதுகாப்புப் படையினா் ஞாயிற்றுக்கிழமை நாமக்கல் வந்தனா். தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தோ்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட தோ்தல் அலுவலா்களான ஆட்சியா்கள் செய்து வருகின்றனா். தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் பறக்கும் படையினரும், நிலை கண்காணிப்புக் குழுவினரும் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், தோ்தல் நேரத்தில் அசம்பாவிதங்களைத் தவிா்க்க, மத்திய எல்லை பாதுகாப்புப் படை வீா்கள் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக அனுப்பப்பட்டு வருகின்றனா். அந்த வகையில், பெங்களூரில் இருந்து 2 கம்பெனிகளைச் சோ்ந்த 180 எல்லை பாதுகாப்புப் படையினா் நாமக்கல்லுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தனா். அவா்கள், நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்திலும், ஆயுதப்படை மண்டபத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனா். அவா்களுடைய கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை காலை நடைபெற உள்ளது. அதன்பிறகு, சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக அனுப்பி வைக்கப்படுவாா்கள் என தோ்தல் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com