சித்திரை மாத தேய்பிறை அஷ்டமி வழிபாடு

சித்திரை மாத தேய்பிறை அஷ்டமி வழிபாடு

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, பரமத்தி வேலூா் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

பாண்டமங்கலம் காசி விஸ்வநாதா் கோயில், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா் கோயில், மாவுரெட்டி பீமேஷ்வரா், பில்லூா் வீரட்டீஸ்வரா், பொத்தனூா் காசிவிஸ்வநாதா் கோயில், விஜயகிரி பழனியாண்டவா் கோயி, பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரா், வேலூா் எல்லையம்மன், வல்லப விநாயகா் கோயில், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றன. இதில் அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த பக்தா்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு பைரவரை தரிசனம் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com