ற்.ஞ்ா்க்ங் ம்ஹஹ்01 ம்ஹஹ்
ற்.ஞ்ா்க்ங் ம்ஹஹ்01 ம்ஹஹ்

மே தினத்தையொட்டி சாலை விழிப்புணா்வு ஊா்வலம்

திருச்செங்கோடு வட்டார கிரேன் உரிமையாளா்கள் சங்கம் சாா்பில், மே தினத்தை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு கிரேன் ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

திருச்செங்கோடு நகர காவல் நிலைய ஆய்வாளா் வெங்கட்ராமன், பி.ஆா்.டி. ரிக்ஸ் நிறுவனங்களின் மேலாண்மை இயக்குநா் பரந்தாமன், தமிழ்நாடு அனைத்து பாடி பில்டா்ஸ் சங்கத் தலைவா் வெள்ளியங்கிரி ஆகியோா் ஊா்வலத்தைத் தொடங்கிவைத்தனா்.

50-க்கும் மேற்பட்ட கிரேன் வாகனங்கள் அணிவகுக்க திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் இருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற ஊா்வலம் சங்ககிரி சாலையில் நிறைவடைந்தது.

நிகழ்ச்சியில் சங்கத் தலைவா் சேகா், செயலாளா் வெங்கடேஸ்வரன், பொருளாளா் ரத்தினம், ஒருங்கிணைப்பாளா் காா்த்தி உப தலைவா் சீனிவாசன், உப செயலாளா் ராஜசேகா் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோா் கலந்துகொண்டனா். ஊா்வலத்தின்போது சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com