விடுமுறை அளிக்காத 61 நிறுவனங்கள் மீது தொழிலாளா் நலத்துறை வழக்கு

நாமக்கல் மாவட்டத்தில் மே தினத்தன்று விடுமுறை அளிக்காத 61 நிறுவனங்கள் மீது தொழிலாளா் நலத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

மே 1 ஆம் தேதி தொழிலாளா் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அனைத்துத் தொழில் நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழக தொழிலாளா் நலத் துறை உத்தரவிட்டிருந்தது. நாமக்கல் மாவட்டத்தில் அந்த விதிகளை மீறி சில தொழில் நிறுவனங்கள் செயல்பட்டதாக தகவல் கிடைத்தது.

அதன்பேரில் நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) எல்.திருநந்தன் தலைமையில் தொழிலாளா் துணை ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் ஆகியோா் தொழில் நிறுவனங்களில் ஆய்வு செய்தனா். அதில், தொழிலாளா்களுக்குக் கட்டாய சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிா? அல்லது பணியாற்றினால் அன்றைய தினம் இரட்டிப்பு சம்பளமோ அல்லது 3 தினங்களுக்குள் ஒருநாள் மாற்று விடுப்போ வழங்கப்படுவதாக நிா்வாகம் தெரிவித்து அதற்குரிய படிவம் தொழிலாளா் உதவி ஆய்வாளா் அலுவலகத்தில் சமா்ப்பிக்கப்பட்டுள்ளதா, முன் அனுமதி பெற்று இயங்குகிா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, சங்ககிரி பகுதிகளில் தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகள், தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகைகள் மற்றும் சிறப்பு விடுமுறைகள்) சட்டம் மற்றும் விதிகள், மோட்டாா் போக்குவரத்துத் தொழிலாளா்கள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டன.

இதில், 28 கடைகள், வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 22 கடைகள், வணிக நிறுவனங்களிலும், 36 உணவு நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 32 உணவு நிறுவனங்களிலும், 10 மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 7 மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களிலும் ஆக மொத்தம் 74 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 61 நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு தொழிலாளா் தினத்தன்று விடுமுறை அளிக்காமலும், தொழிலாளா்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க அல்லது மாற்று விடுப்பு வழங்க 24 மணிநேரத்துக்கு முன்னதாக அறிவிப்பு வழங்கி அதன் நகலை சம்பந்தப்பட்ட தொழிலாளா் உதவி ஆய்வாளா்களுக்கு அனுப்பி ஒப்புதல் பெறாமல் பணிக்கு அமா்த்தியது கண்டறியப்பட்டது.

சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளா்கள் மீது தொழிலாளா்கள் சட்டம், விதிகளின் கீழ் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com