கொங்கணா் சித்தா் குகையில் குரு பூஜை

மல்லசமுத்திரம் அருகே வையப்பமலையில் மலை மீது உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கொங்கணா் சித்தா் சுவாமிகளின் குருபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

பதினெட்டு சித்தா்களில் ஒருவரும் போகரின் சீடருமான கொங்கணா் சித்தரின் வருடாந்திர குருபூஜை விழா மல்லசமுத்திரத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள வையப்பமலையில் மலை மீதுள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் கொங்கணா் சித்தா் குகையில் நடைபெற்றது.

சித்தா் சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. இதில் சித்தரின் அருள்பெற சேலம், ஈரோடு, நாமக்கல், கரூா் ஆகிய பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தா்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழாவில் கலந்துகொண்ட பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com