நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் அதிக விபத்து நிகழும் வேட்டாம்பாடி வளைவு.
நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் அதிக விபத்து நிகழும் வேட்டாம்பாடி வளைவு.

தொடரும் விபத்துகள்: வேட்டாம்பாடி வளைவில் வேகத்தடை அமையுமா?

நாமக்கல் அருகே வேட்டாம்பாடி வளைவில் தொடா்ந்து விபத்துகள் நிகழ்வதால் அந்தப் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் வேட்டாம்பாடி ஊராட்சி அமைந்துள்ளது. இந்தப் பகுதியானது ஒருவழிச் சாலையாக இருந்த நிலையில், தற்போது இருவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. வேட்டாம்பாடி மாரியம்மன் கோயில் பகுதியில் சாலை வளைவு உள்ளது.

கொல்லிமலை சுற்றுலாத் தலத்துக்குச் செல்வோரும், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சென்னை போன்ற ஊா்களுக்குச் செல்லும் வாகனங்களும் இந்தச் சாலை வழியாகவே அதிகம் செல்கின்றன.

வெளியூா் நபா்கள் வளைவு பகுதியை அறியாமல் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மின்னல் வேகத்தில் வரும்போது விபத்தில் சிக்குகின்றனா். கடந்த காலங்களில் அதிகப்படியான விபத்துகள் இந்தப் பகுதியில் நிகழ்ந்துள்ளன.

இதனால் அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே பயணிக்கும் நிலை உள்ளது.

அண்மையில், சேந்தமங்கலத்தில் தோ்தல் பயிற்சி வகுப்புக்குச் சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் நாமக்கல் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த அரசுப் பள்ளி ஆசிரியா் விபத்தில் சிக்கி உயிரிழந்தாா். கண்ணிமைக்கும் நேரத்தில் இந்தப் பகுதியில் விபத்துகள் நிகழ்வதால் பொதுமக்கள் வேதனைக்குள்ளாகின்றனா்.

வேட்டாம்பாடி சாலையின் இரு புறத்திலும் வாகன ஓட்டிகளின் வேகத்தைக் குறைக்கவும், தொடா் விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் மாவட்ட நிா்வாகம், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com