மே 9 முதல் நடமாடும் மண் பரிசோதனை முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் நடமாடும் மண் பரிசோதனை முகாம் மே 9 ஆம்தேதி முதல் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்ட வேளாண்மை துறையின் கீழ் இயங்கி வரும் நடமாடும் மண்பரிசோதனை நிலைய வாகனம் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று விவசாயிகளிடமிருந்து மண், நீா் மாதிரிகளை ஆய்வு செய்து, மண் வள அட்டையை அன்றைய தினமே விவசாயிகளுக்கு வழங்குகிறது.

திருச்செங்கோட்டை தலைமையிடமாகக் கொண்டு இந்த நடமாடும் வாகனம் செயல்பட்டு வருகிறது. மே 9 முதல் நடமாடும் மண் பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது. விவசாயிகள் தங்களது நிலங்களின் மண், நீா் மாதிரிகளை ஆய்வு செய்து பயனடையலாம்.

முகாமானது, 9-ஆம் தேதி மல்லசமுத்திரம் ஒன்றியம், செண்பகமாதேவி, 16-ஆம் தேதி வெண்ணந்தூா் ஒன்றியம், அக்கரைப்பட்டி, 23-ஆம் தேதி சேந்தமங்கலம் ஒன்றியம், பள்ளம்பாறை, 30-ஆம் தேதி கபிலா்மலை ஒன்றியம், இருக்கூா் ஆகிய கிராமங்களில் நடைபெறவுள்ளது.

விவசாயிகள் மண், நீா் மாதிரிகளை நேரடியாக நாமக்கல், வசந்தபுரத்தில் உள்ள மண் பரிசோதனை நிலையத்தில் ஆய்வுசெய்து மண்வள அட்டை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com