விவசாயிகளுக்கு இயற்கை உரம் வழங்கல்

பள்ளிபாளையம் நகராட்சி பகுதியில் வீடுதோறும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, கோட்டாங்காடு பகுதியில் உள்ள உரம் தயாரிக்கும் மையத்துக்கு கொண்டுசென்று, அங்கு மட்கும் குப்பை, மட்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகிறது.

இதில், தினமும் சராசரியாக 15 டன் இலை, காய்கறி கழிவுகள் உள்ளிட்ட மட்கும் குப்பை தரம் பிரிக்கப்படுகிறது. தரம் பிரிக்கப்பட்ட மக்கும் குப்பையில் உரம் தயாரிக்கப்படுகிறது. இதற்கான வடிவமைக்கப்பட்ட உரம் தயாரிக்கும் தொட்டியில், 45 நாள்கள் பதப்படுத்தி மறுசூழற்சி செய்யப்பட்டு உரம் தயாரிக்கப்படுகிறது.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட 20 டன் உரம் கொக்கராயன்பேட்டை சுற்றுவட்டார விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com