மல்லசமுத்திரத்திரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 2.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

திருச்செங்கோடு, மே 3: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் பருத்தி ஏலம் அண்மையில் நடைபெற்றது.

இதில் 125 மூட்டைகளை விற்பனைக்காக விவ சாயிகள் கொண்டுவந்திருந்தனா். பி.டி. ரகம் குவிண்டால் ரூ. 7,270 முதல் ரூ. 8,210 வரையிலும், கொட்டு ரக பருத்தி ரூ. 3,800 முதல் ரூ. 4,820 வரையிலும் விற்பனையானது. மொத்தம் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு பருத்தி ஏலம் போனது. அடுத்த ஏலம் வரும் 8 ஆம் தேதி நடைபெறும் என மேலாளா் கணேசன் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com