மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம்

திருச்செங்கோடு, மே 3: பள்ளிபாளையத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லுாரி மாணவியின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.

பள்ளிபாளையம் அருகே காவிரி பகுதியை அடுத்த ராஜாஜி நகரைச் சோ்ந்தவா் விஜயகுமாா். மளிகைக் கடை வைத்துள்ளாா். இவரது மகள் சஞ்சீவ்விகாஷினி (19). ஈரோட்டில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வந்தாா். இரண்டு நாள்களுக்கு முன் இவருக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து

ஈரோட்டில் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு பரிசோதனை செய்தபோது அவரது தலையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தனா்.

இதில் சஞ்சீவ்விகாஷினி மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து இவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. சஞ்சீவ்விகாஷினி உடல் வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. திருச்செங்கோடு ஆா்.டி.ஓ. சுகந்தி, மாணவியின் உடலுக்கு மலா் வளையம் வைத்து அரசு மரியாதை செலுத்தினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com