குருபூஜை விழா

குருபூஜை விழா

பரமத்தி வேலூா், மே 4: பரமத்தி வேலுாா் அருகே உள்ள நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா் கோயிலில் உள்ள திருநாவுக்கரசருக்கு குரு பூஜை விழா வெள்ளிக்ழமை நடைபெற்றது.

பரமத்தி வேலூா் அருகே உள்ள நன்செய் இடையாறு, திருமணிமுத்தாறு கரையில் உள்ள சுந்தரவல்லி அம்பிகா சமேத திருவேலீஸ்வரா் கோயில் பஞ்சபாண்டவா்களில் ஒருவரான பீமானால் பிரதிஷ்டை செய்யப்பட்டு கி.பி 10-ஆம் நூற்றாண்டில் முதலாம் ராஜாராஜ சோழனும், அவரது மகன் ராஜேந்திர சோழனாலும் கட்டப்பட்டதற்கான கல்வெட்டு சான்று உள்ளது.

ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தை முன்னிட்டு இக்கோயிலில் உள்ள திருநாவுக்கரசருக்கு குரு பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழாண்டு திருநாவுக்கரசா், உற்சவ திருநாவுக்கரசா், திருஞானசம்பந்தா், சுந்தரமூா்த்தி, மாணிக்கவாசகருக்கு ஆகிய சமயகுரவா்களுக்கு பஞ்சாமிா்தம், தேன், பால், தயிா், இளநீா், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம், விபூதி உள்பட 11 வகை வாசனை திரவியபொருள்கள் கொண்டு அபிஷேகமும் பின்னா் சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com