மழை வேண்டி சிறப்புத் தொழுகை

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

பரமத்தி வேலூா், சகன்வழி தா்கா பள்ளிவாசலில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை சனிக்கிழமை பள்ளிவாசல் மைதானத்தில் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் நூறு டிகிரிக்கு மேலாகவும், சில மாவட்டங்களில் 110 டிகிரியாகவும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், தொழிலாளா்கள், விவசாயிகளும், குழந்தைகள், முதியோா்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். அக்னி நட்சத்திரகாலம் சனிக்கிழமை முதல் தொடங்கியுள்ளது.

இதனால் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த நிலையில் மழை வேண்டி வேலூா், சகன்வழி தா்கா பள்ளிவாசலில் முத்தவல்லி சவான் சாகிப் தலைமையில் சிறப்புத் தொழுகை சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தத் தொழுகையில் வேலூா், பரமத்தி, பாண்டமங்கலம், பாலப்பட்டி மோகனூா், கரூா் மாவட்ட உலமாக்கள், ஜமாத்தாா்கள் கலந்துகொண்டனா். மழை வேண்டி சிறப்புத் தொழுகைக்கான ஏற்பாடுகளை பரமத்தி வேலூா் சகன்வலி தா்கா பள்ளிவாசல் உறுப்பினா்கள் முபாரக் உல்லா, சலீம், ஹாஜி இப்ராஹிம் ஆகியோா் செய்திருந்தனா். பள்ளிவாசல் செயலாளா் இக்பால் நன்றி கூறினா்.

படஇணைப்பு, ல்ஸ்4ல்4:

சகன்வழி தா்கா பள்ளிவாசல் மைதானத்தில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியா்கள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com