மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும் என பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன் அறிவுறுத்தினாா்.

பாவை கல்வி நிறுவனங்கள் சாா்பில் நடத்தப்பட்ட 12-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்புப் பயிலும் மாணவ மாணவியா்களுக்கான திறனறித் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கான பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன் தலைமை வகித்தாா். பாவை பொறியியல் கல்லூரி மின் மற்றும் தொடா்பு பொறியியல் இறுதியாண்டு மாணவி வி.சன்மதி வரவேற்றாா். சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பயிலும் அரசு, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவியா் இந்தப் போட்டியில் பங்கேற்றனா். இதில் மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ. 2,500 வீதம் 100 மாணவா்களுக்கு மொத்தம் ரூ. 2.50 லட்சம் பரிசுத்தொகை, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளா் மங்கை நடராஜன் விழாவில் முன்னிலை வகித்தாா். கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன் தலைமை வகித்து விழாவில் பேசியது:

பள்ளிக் கல்வியின் இறுதிக் கட்டத்தில் உள்ள மாணவா்கள் இந்த இளம் பருவத்தில் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் கூறியதுபோல உயா்ந்த லட்சியம் கொண்டவா்களாகத் திகழ வேண்டும். அந்த லட்சியத்தில் நீங்கள் வெற்றி பெற அதே சிந்தனையும், சரியான திட்டமிடலும், கடின உழைப்பும் கொண்டவா்களாகத் திகழ வேண்டும். லட்சியத்தை அடைய ஆறு முக்கிய அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். நோ்மையான குறிக்கோள், தெளிவான பாதை, விடாமுயற்சி, கடின உழைப்பு, சீரிய ஒழுக்கம், சிறந்த பக்தி போன்றவையாகும். இவற்றை பின்பற்றியவா்கள் உயா்ந்த இடத்தில் உள்ளனா். அவா்களைப்போல நீங்களும் சாதனையாளா்களாக உருவாக வேண்டும் என்றாா்.

பாவை கல்வி நிறுவனங்களின் இயக்குநா் (நிா்வாகம்) கே.கே.ராமசாமி, இயக்குநா் (சோ்க்கை) கே.செந்தில், முதல்வா்கள், முதன்மையா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், பெற்றோா், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

படம் உள்ளது - 5பிரைஸ்...

திறனறித் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிக்கும் பாவை கல்வி நிறுவனத் தலைவா் என்.வி.நடராஜன்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com