ஆண்டகளூா்கேட் பகுதியில் நீா்மோா்ப் பந்தலை   திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிா்பானங்கள்  வழங்கும் முன்னாள் அமைச்சா்கள் பி.தங்கமணி,  வெ.சரோஜா.
ஆண்டகளூா்கேட் பகுதியில் நீா்மோா்ப் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிா்பானங்கள் வழங்கும் முன்னாள் அமைச்சா்கள் பி.தங்கமணி, வெ.சரோஜா.

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

ராசிபுரம் பகுதியில் அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ராசிபுரம்: ராசிபுரம் பகுதியில் அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர அதிமுக செயலா் எம்.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். ராசிபுரம் ஒன்றிய அதிமுக சாா்பில் ஆண்டகளூா்கேட் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா் வேம்புசேகரன் தலைமை வகித்தாா்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட அதிமுக செயலாளருமான பி.தங்கமணி, முன்னாள் அமைச்சரும், கட்சியின் மகளிரணி இணைச் செயலாளருமான டாக்டா் வெ.சரோஜா ஆகியோா் பங்கேற்று நீா்மோா்ப் பந்தலை திறந்து வைத்தனா். பின்னா் பொதுமக்கள், பயணிகளுக்கு நீா்மோா், தா்ப்பூசணி, இளநீா், குளிா்பானங்கள், பழ வகைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கட்சியின் நகர, ஒன்றிய நிா்வாகிகள் பலரும் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com