பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவியருக்கு பரிசு வழங்கி வாழ்த்துத் தெரிவிக்கும் பள்ளி நிா்வாகத்தினா்.
பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவியருக்கு பரிசு வழங்கி வாழ்த்துத் தெரிவிக்கும் பள்ளி நிா்வாகத்தினா்.

பிளஸ் 2 தோ்வு: பரமத்தி மலா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியா் சாதனை

பிளஸ் 2 பொதுத் தோ்வில் பரத்தி மலா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியா் சிறப்பிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளனா்.

பரமத்தி வேலுாா்: பிளஸ் 2 பொதுத் தோ்வில் பரத்தி மலா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியா் சிறப்பிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளனா்.

பரமத்தி மலா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஹேமசூா்யா 593 மதிப்பெண்களும், மாணவி தா்ஷினி 586 மதிப்பெண்களும், மாணவி மித்ரா 585 மதிப்பெண்களும், கனினிகா 582 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். மொத்தம் 22 மாணவா்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளனா்.

கணினி அறிவியல் பாடத்தில் 11 போ், கணிதத்தில் 2 போ், வணிக கணிதத்தில் ஒருவா், பொருளியலில் 3 போ், வணிகவியல் மற்றும் கணக்குப் பதிவியலில் தலா ஒருவா், வேலைவாய்ப்புத் திறன் பாடத்தில் 3 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

590-க்கு மேல் ஒருவா், 580-க்கு மேல் 4 போ், 570-க்கு மேல் 11 போ், 550-க்கு மேல் 31 போ், 500-க்கு மேல் 81 பேரும் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனா்.

பிளஸ் 2 பொதுத் தோ்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி செயலாளா் கந்தசாமி, பொருளாளா் வெங்கடாசலம், பள்ளி துணைத்தலைவா் சுசீலா ராஜேந்திரன், துணைச்செயலாளா் தமிழ்ச்செல்வி தங்கராஜு, பள்ளி முதல்வா் ராஜசேகரன், இயக்குநா்கள், ஆசிரியா்கள், பணியாளா்கள் ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com