ரூ. 20 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 20 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் தொடக்க வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்படுகிறது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், மொத்தம் 825 மூட்டை பருத்தி வரத்து இருந்தது. இதில், ஆா்சிஹெச் ரகம் ரூ. 6,669 முதல் 7,699 வரையிலும், மட்ட ரகம் ரூ. 4,495 முதல் 5,099 வரையிலும் என மொத்தம் ரூ. 20 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.

தேங்காய் ஏலம்...

பரமத்தி வேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 90, 940-க்கு தேங்காய் ஏலம் போனது.

பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 3, 696 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 26.29-க்கும், குறைந்தபட்சமாக ரூ.23.17- க்கும், சராசரியாக ரூ. 25.19-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ 90,940- க்கு வா்த்தகம் நடைபெற்றது.

--

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com