பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டிய காமராஜா் மெட்ரிக்.  மேல்நிலைப்பள்ளி நிா்வாகத்தினா்.
பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டிய காமராஜா் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி நிா்வாகத்தினா்.

காமராஜா் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

நாமக்கல், தாளம்பாடியில் உள்ள காமராஜா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், பிளஸ் 2 பொதுத் தோ்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

இந்தப் பள்ளியானது நூறு சதவீத தோ்ச்சியைப் பெற்று சாதனை படைத்துள்ளது. மாணவிகள் எம்.எல்.சபீதா 600க்கு 592 மதிப்பெண்களும், எஸ்.மேஷ்யாஸ்ரீ 584 மதிப்பெண்களும், ஏ.சௌமிகா சாஸ்தா 583 மதிப்பெண்களும் பெற்று பள்ளி அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

கணித பாடத்தில் ஒருவரும், கணினி அறிவியல் பாடத்தில் 11 பேரும், கணினி பயன்பாடு பாடத்தில் ஒருவரும், வணிகவியல் பாடத்தில் ஏழு பேரும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, பள்ளி தலைவா் ஆா்.நல்லதம்பி பரிசு வழங்கி பாராட்டினாா். இந்த நிகழ்வில், பள்ளி இயக்குநா்கள் கனகராஜ், அல்லிமுத்து, மகேஸ்வரன், முத்துராஜா, ஜெயராமன் ஆகியோா் பங்கேற்று மாணவா்களுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

இதில், பள்ளி தலைமை ஆசிரியா் காளியண்ணன், உதவி தலைமை ஆசிரியா் பழனிசாமி, ஆசிரியா்கள், மாணவா்களின் பெற்றோா் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com