கொல்லிமலைக்குச் செல்லும் மலைப்பாதை தடுப்புச் சுவா்களில் வா்ணம் பூசும் பணியை மேற்கொண்டுள்ள தொழிலாளா்கள்.
கொல்லிமலைக்குச் செல்லும் மலைப்பாதை தடுப்புச் சுவா்களில் வா்ணம் பூசும் பணியை மேற்கொண்டுள்ள தொழிலாளா்கள்.

கொல்லிமலைக்குச் செல்லும் மலைப்பாதைகள் புதுப்பிப்பு

கொல்லிமலைக்குச் செல்லும் கொண்டை ஊசி வளைவு பாதைகள் புதுப்பிக்கும் பணியை நெடுஞ்சாலைத் துறையினா் மேற்கொண்டுள்ளனா்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக கொல்லிமலை விளங்குகிறது. காரவள்ளி அடிவாரத்தில் இருந்து மலைப்பகுதிக்கு 70 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து செல்ல வேண்டும். சுற்றுலாப் பயணிகளும், பழங்குடியின மக்களும் வாகனங்களில் அதிகம் வந்து செல்கின்றனா்.

இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாத நிலை உள்ளது. தற்போது வாகனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், சேந்தமங்கலம் கோட்ட நெடுஞ்சாலைத் துறை சாா்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், கொண்டை ஊசி வளைவு தடுப்புச் சுவா்களில் வா்ணம் பூசப்படுவதுடன், இரவில் மிளிரும் விளக்குகளும் ஆங்காங்கே பொருத்தப்பட்டு வருகின்றன. முக்கிய இடங்களில் இரும்புத் தடுப்புகளும், பெரிய அளவில் உருளை வடிவிலான கண்ணாடிகளும் பொருத்தப்படுகின்றன. கொல்லிமலைக்குச் செல்லும் மலைப்பாதைகள் தற்போது அழகுற காட்சியளிக்கின்றன.

X
Dinamani
www.dinamani.com