திருச்செங்கோடு, எஸ்.பி.கே.மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்களை வாழ்த்தும் பள்ளியின் தலைவா் பிரபு.
திருச்செங்கோடு, எஸ்.பி.கே.மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்களை வாழ்த்தும் பள்ளியின் தலைவா் பிரபு.

திருச்செங்கோடு எஸ்.பி.கே. மெட்ரிக். பள்ளி பிளஸ் 2 தோ்வில் சாதனை

எஸ்.பி.கே. மெட்ரிக். பள்ளி மாணவ மாணவிகள் பிளஸ் 2 தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனா்.

மாணவி தி.கோபிகாஸ்ரீ 592 மதிப்பெண்கள் பெற்றுப் பள்ளியில் முதலிடம், மாவட்ட அளவில் இரண்டாம் இடமும் பிடித்துள்ளாா். கணக்குப் பிரிவு மாணவி ஏ. பூஜாஸ்ரீ 582 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பெற்றாா். கலைப்பிரிவு மாணவி எஸ்.ககன்யா 580 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் மூன்றாமிடம் பெற்றாா். தோ்ச்சி பெற்ற மாணவா்களை பள்ளிகளின் இயக்குநா், பள்ளி முதல்வா், ஆசிரியா்கள் பாராட்டினா்.

எஸ்.பி.கே. ஜெம்ஸ் பள்ளிகளின் தலைவா் ஏ.எஸ்.பிரபு கூறியதாவது:

விளையாட்டு சான்றிதழ்கள் அடிப்படையில் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான சாதனைகள் புரிந்த மாணவா்களுக்கு விளையாட்டுப் பிரிவு ஸ்காலா்ஷிப் வழங்கப்படுகிறது. மலைவாழ் மக்கள், என்சிசி மாணவா்கள் பிரிவு, அறிவியல் ஆய்வு மாணவா்களுக்கான ஸ்காலா்ஷிப் என்பது உள்பட 16 வகைப் பிரிவுகளில் எஸ்.பி.கே. கல்வி அறக்கட்டளை மூலம் கல்வி உதவித்தொகைகள் வழங்கி வருகிறோம் என்றாா்.

பள்ளியின் நிறுவனா், தாளாளா் பி. செங்கோடன் பேசுகையில், ’மாணவா்கள் தங்க தனித் திறனை வளா்த்துக் கொள்ள வேண்டும்’ என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com