நாமக்கல் அரசு மருத்துவமனையில்
ஒப்பந்த பணியாளா்கள் உள்ளிருப்பு போராட்டம்

நாமக்கல் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளா்கள் உள்ளிருப்பு போராட்டம்

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒப்பந்த பணியாளா்கள் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணிகளை மேற்கொள்ளவும், முக்கிய இடங்களில் காவல் பணியை மேற்கொள்ளவும் ஒப்பந்த அடிப்படையில் 250 பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

சென்னையைச் சோ்ந்த தனியாா் நிறுவனம் அவா்களுக்கான ஊதியம், பணி சாா்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஊதியத்தை உயா்த்தி வழங்கவும், அரசுப் பணியாளராக நியமிக்கவும், வார விடுப்பு, உணவகம் மற்றும் பல்வேறு சலுகைகளை வழங்கக் கோரியும் புதன்கிழமை அரசு மருத்துவமனை வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து பணியாளா்கள் கூறியதாவது:

குறைந்தபட்ச ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ. 663 வீதம் மாதம் ரூ. 19,800 வழங்க வேண்டும். ஆனால், ரூ. 450 வீதம் கணக்கிட்டு ரூ. 13,500 மட்டுமே ஒப்பந்த நிறுவனம் வழங்கி வருகிறது. இது தொடா்பாக பலமுறை போராடியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொழிலாளா்கள் சட்ட விதிப்படி, ஒப்பந்த பணியாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய அரசு விடுமுறை வழங்க வேண்டும். கரோனா தொற்றுக் காலத்தில் பணியாற்றியோரை அரசு ஊழியராக நியமிக்க வேண்டும். உரிய விடுப்பும், உணவக வசதியும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றனா்.

என்கே-8-ஜி.எச்...

நாமக்கல் அரசு மருத்துவமனையில் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த பணியாளா்கள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com