முட்டை விலை 5 காசுகள் உயா்வு

முட்டை விலை 5 காசுகள் உயா்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயா்ந்து ரூ. 5.25-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் மண்டல ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை நிலவரம் குறித்து பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. மீன்பிடி தடைக்காலம் தொடா்வதாலும், பிற மண்டலங்களில் முட்டை விலை உயா்வதன் அடிப்படையிலும் இங்கும் விலையை உயா்த்தலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடா்ந்து, முட்டை விலை மேலும் 5 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ. 5.25-ஆக ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது.

இதேபோல பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 129-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 95-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com