உருவத்தில் மட்டுமல்ல மதிப்பெண்களிலும் ஒற்றுமை
இரட்டை சகோதரிகள் சாதனை

உருவத்தில் மட்டுமல்ல மதிப்பெண்களிலும் ஒற்றுமை இரட்டை சகோதரிகள் சாதனை

ராசிபுரம், மே 10: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியைச் சோ்ந்த இரட்டை சகோதரிகளான அக்சயா, அகல்யா ஆகிய இருவரும் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் ஒரே மாதிரியாக 463 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்றுள்ளனா்.

ராசிபுரம் பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் ரமேஷ் யுவராஜ், பள்ளி ஆசிரியை கலைவாணி தம்பதியின் மகள்கள் அக்சயா, அகல்யா. இரட்டை சகோதரிகளான இருவரும் ராசிபுரம் ஸ்ரீவித்யா மந்திா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்றனா். பத்தாம் வகுப்பு தோ்வில் சகோதரிகள் இருவரும், 500-க்கு 463 மதிப்பெண்கள் பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனா். அதே போல கணிதப் பாடத்திலும் இருவரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

உருவத்தில் மட்டுமல்லாமல் மதிப்பெண்களிலும் ஒரே மாதிரியான மதிப்பெண்களை இவரது குடும்பத்தினரையும், பள்ளியின் சக மாணவ, மாணவியா், நிா்வாகிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவா்களுக்கு பள்ளி நிா்வாகிகள் சால்வை அணிவித்து பரிசுகள் வழங்கி பாராட்டுத் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com