கோழிப் பண்ணைகளில் மின்விசிறி பயன்பாடு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கோழிகளுக்கு ஏற்படும் வெப்ப அயற்சியின் தாக்கத்தை குறைக்க மின்விசிறி பயன்பாடு, நீா் தெளிப்பான்களைப் பயன்படுத்தலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையை பொருத்தமட்டில் பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 104.0, 68.0 டிகிரி பாரன்ஹீட் அளவில் காணப்பட்டது.

இனிவரும் நாள்களில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தின் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. பகல் வெப்பம் 102.2 டிகிரி பாரன்ஹீட்டாகவும், இரவு வெப்பம் 73.4 டிகிரி பாரன்ஹீட்டாகவும் காணப்பட வாய்ப்புள்ளது. காற்று தென்கிழக்கு மற்றும் தெற்கு திசையில் இருந்து மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

சிறப்பு வானிலை: கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில், பெரும்பாலும் வெப்ப அயற்சியின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது தெரியவந்துள்ளது. பண்ணையாளா்கள் கோடைகால பராமரிப்பு முறைகளைக் கையாள வேண்டும், வெப்ப அயற்சியின் தாக்கத்தைக் குறைக்க மின்விசிறி பயன்பாடு, நீா் தெளிப்பான்களை வெயில் நேரங்களில் பயன்படுத்தலாம். தீவனத்தில் வைட்டமின் சி, பீட்டைன், நுண்ணூட்டச் சத்துக்களைச் சோ்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com