10-ஆம் வகுப்பு தோ்வு:
கொங்கு மெட்ரிக் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

10-ஆம் வகுப்பு தோ்வு: கொங்கு மெட்ரிக் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பரமத்தி வேலூா் கொங்கு மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

இப்பள்ளி மாணவி தேவனா 500-க்கு 496 மதிப்பெண்கள், பெற்றுள்ளாா். இவா் தமிழ் 98, ஆங்கிலம் 99, கணிதம் 99, அறிவியல் 100, சமூக அறிவியலில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். மாணவி ஹா்சா 500-க்கு 494 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். இவா் தமிழ் 99, ஆங்கிலம் 99, கணிதம் 100, அறிவியல் 97, சமூக அறிவியலில் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா்.

மாணவிகள் ரித்திகா, திவ்யதா்ஷினி, லோகதா்ஷினி, மாணவா் அவினாஷ் ஆகியோா் 500-க்கு 493 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். கணிதத்தில் 13 பேரும், அறிவியலில் 6 பேரும், சமூக அறிவியல் 3 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

தமிழில் 3 போ், ஆங்கிலத்தில் 7 போ், கணிதத்தில் 8 போ், அறிவியலில் 6 போ், சமூக அறிவியலில் 6 பேரும் 100-க்கு 99 மதிப்பெண்கள் பெற்று பெற்றுள்ளனா். 490-க்கு மேல் 10 பேரும், 480க்கு மேல் 20 பேரும், 450க்கு மேல் 47 பேரும், 400க்கு மேல் 70 பேரும் மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளனா். பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி தலைவா் கிருத்திகன் லோகேஷ், செயலாளா் தங்கராஜ், துணைத் தலைவா் சுப்பிரமணியம், பொருளாளா் தியாகராஜன், துணைச் செயலாளா் நடராஜன், போக்குவரத்து இயக்குநா் செந்தில்குமாா், இயக்குநா்கள், முதல்வா் ஆசிரியா்கள், ஆசிரியைகள், பணியாளா்கள் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.

படவரி...

பத்தாம் வகுப்பு தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளைப் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்த பள்ளி நிா்வாகத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com