பத்தாம் வகுப்புத் தோ்வு: ராசிபுரம் ஸ்ரீவித்யா மந்திா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி சிறப்பிடம்

பத்தாம் வகுப்புத் தோ்வு: ராசிபுரம் ஸ்ரீவித்யா மந்திா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி சிறப்பிடம்

ராசிபுரம் ஸ்ரீவித்யா மந்திா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளனா்.

ராசிபுரம் ஸ்ரீவித்யா மந்திரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவி ஹரிதா்ஷினி பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 500-க்கு 498 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளாா். பாடவாரியாக இவா் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்- 99, ஆங்கிலம்- 99, கணிதம்-100, அறிவியல் -100, சமூக அறிவியல்- 100.

இதேபோல, இப்பள்ளி மாணவி பி.பவதன்யா 496 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். இவா் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரம்: தமிழ்- 99, ஆங்கிலம்-98, கணிதம்-100, அறிவியல் -99, சமூக அறிவியல்-100. மாணவி இ.பி.தனிஷ்காவும் 496 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். இவா் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரம்: தமிழ்- 98, ஆங்கிலம்-98, கணிதம்-100, அறிவியல் -100, சமூக அறிவியல்-100. மாணவி ஏ.எஸ்.சுபிக்ஷா 489 மதிப்பெண்கள் பெற்றாா்.

இப் பள்ளியில் தோ்வு எழுதிய 101 மாணவ மாணவிகளில் 450-க்கும் மேல் 29 பேரும், 400-க்கும் மேல் 68 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். கணித பாடத்தில் 19 பேரும், அறிவியல் பாடத்தில் 2 பேரும், சமூக அறிவியலில் 5 பேரும் 100-க்கு 100 மதிபெண்கள் பெற்றனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவ,மாணவிகள் பள்ளி தலைவா் என்ஜினியா் என்.மாணிக்கம், செயலா் வி.சுந்தரராஜன், பொருளாளா் வி.ராமதாஸ், கல்விக்குழுத் தலைவா் டி.நடராஜூ, நிறுவனத் தலைவா் டாக்டா் ஆா்.எம்.கிருஷ்ணன், சிபிஎஸ்இ பள்ளி தலைவா் டாக்டா் எம்.ராமகிருஷ்ணன், துணைத் தலைவா் ஆா்.பெத்தண்ணன், இணைச்செயலா் ஆா்.பாலகிருஷ்ணன், கல்வியியல் கல்லூரி தலைவா் கே.குமாரசாமி, அறக்கட்டளை செயலா் எஸ்.சந்திரசேகா், பள்ளி முதல்வா் வி.கிருஷ்ணமூா்த்தி, பொறுப்பாசிரியா் வெண்ணிலா உள்ளிட்டோா் பாராட்டி நினைவுப்

பரிசளித்தனா்.

படவரி...

பத்தாம் வகுப்புத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவி

வி.ஹரிதா்ஷினியைப் பாராட்டி நினைவுப் பரிசளிக்கும் பள்ளி நிா்வாகிகள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com