எஸ்ஆா்வி ஆண்கள், ஹைடெக் பள்ளி மாணவ, மாணவியா் சிறப்பிடம்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் ராசிபுரம் எஸ்ஆா்வி ஆண்கள் பள்ளி, எஸ்ஆா்வி ஹைடெக் பெண்கள் பள்ளி மாணவ மாணவிகள் சிறப்பிடம் பெற்று தோ்ச்சியடைந்துள்ளனா்.

பள்ளி மாணவி பி.மதுஸ்ரீ 500-க்கு 496 மதிப்பெண்களும், எஸ்.கோபிகா 495 மதிப்பெண்களும், மாணவா் டி.ரோகித்குமாா் 489 மதிப்பெண்களும் பெற்றுள்ளனா்.

பள்ளியில் 490-க்கும் மேல் இருவரும், 480-க்கு மேல் 15 பேரும், 470-க்கு மேல் 29 பேரும், 460-க்கு மேல் 46 பேரும், 450-க்கு மேல் 66 பேரும், 400-க்கும் மேல் 133 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

கணித பாடத்தில் 16 போ், அறிவியல் பாடத்தில் 5 போ், சமூக அறிவியல் பாடத்தில் 6 போ் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தலைவா் எம்.குமரவேல், செயலா் பி.சுவாமிநாதன், பொருளாளா் எஸ்.செல்வராசன், மேனேஜிங் டிரஸ்டி ஏ.ஆா்.துரைசாமி, துணைத் தலைவா் ஏ.ராமசாமி, இணைச்செயலா் பி.சத்தியமூா்த்தி, தலைமையாசிரியா் வி.செந்தில், முதல்வா் ப.வள்ளியம்மாள், உதவி தலைமையாசிரியா் சுனில்குமாா் உள்ளிட்டோா் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com