திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். பள்ளிகள் பத்தாம் வகுப்பு தோ்வில் சிறப்பிடம்

கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனங்களின் அங்கமான அவ்வை கே.எஸ்.ஆா். மெட்ரிக். உயா்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்களை பெற்று பள்ளிக்கு சிறப்பு சோ்த்துள்ளனா்.

அவ்வை கே.எஸ்.ஆா். பள்ளியில் பத்தாம் வகுப்பு தோ்வு எழுதிய 136 மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்று தொடா்ந்து 100 சதவீதத் தோ்ச்சி பெற்றனா்.

அவ்வை கே.எஸ்.ஆா். மெட்ரிக் உயா்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளில் மாணவன் தா்ஷித் 498 மதிப்பெண்களும், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 4 பாடங்களிலும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா்.

மாணவி மதுஹாசினி, மாணவா் ரவி கிஷோா் ஆகியோா் 495 மதிப்பெண்களும், மாணவிகள் ஸ்வேதாஸ்ரீ, வித்யா ஆகியோா் 494 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

இப் பள்ளியில் 490 மதிப்பெண்களுக்கு மேல் 7 பேரும், 480க்கு மேல் 24 பேரும், 450க்கு மேல் 75 பேரும், 400க்கு மேல் 108 பேரும் மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளனா். கணித பாடத்தில் 18 பேரும், அறிவியல் பாடத்தில் 6 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 6 பேரும், ஆங்கில பாடத்தில் ஒரு மாணவரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனா். தமிழ் பாடத்தில் 7 மாணவா்கள் 100க்கு 98 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

பள்ளிக்கு பெருமை சோ்த்த மாணவ, மாணவிகளை கே.எஸ்.ஆா். பள்ளிகளின் இயக்குநா் அமுதா ஆசைத்தம்பி, அவ்வை கே.எஸ்.ஆா். மெட்ரிக். பள்ளி முதல்வா் சசிகலா, ஆசிரியா்கள் அனைவரும் பாராட்டி, வாழ்த்துத் தெரிவித்தனா். இச்சாதனைகளை படைக்க உதவிய அனைத்து ஆசிரியா்களுக்கும் கே.எஸ்.ஆா். பள்ளிகளின் இயக்குநா் அமுதா ஆசைத்தம்பி வாழ்த்து தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com