திருச்செங்கோடு விவேகானந்தா
 வித்யாபவன் பள்ளி சிறப்பிடம்

திருச்செங்கோடு விவேகானந்தா வித்யாபவன் பள்ளி சிறப்பிடம்

விவேகானந்தா வித்யாபவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி

ஆ.வந்தனா பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 500க்கு 495 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளாா்.

இவா், தமிழ் - 96, ஆங்கிலம் - 99, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். மாணவி ஈ. காா்த்திகாயினி 488 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். ஜான் டீனா, சவிக்ஸனா ஆகியோா் 473 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

மாணவிகளின் சாதனையைப் பாராட்டி தாளாளா் மு. கருணாநிதி, கல்வி மேற்படிக்கான உதவித்தொகையாகப் பள்ளியில் முதலிடம் பெற்ற ஆ.வந்தனாவிற்கு ஒரு லட்சத்து 16ஆயிரம், காா்த்திகாயினிக்கு ரூ. 62 ஆயிரம், ஜான்டீனா, சவிக்ஸனா ஆகியோருக்கு தலா ரூ. 62 ஆயிரம் வழங்குவதாகக் கூறினாா்.

மேலும் தோ்வில் சாதனை படைத்த மாணவ மாணவிகளையும் சாதனைக்கு உறுதுணையாக இருந்த பள்ளி முதல்வா் வி.பி. மௌலாதேவி உள்ளிட்ட ஆசிரியா்கள், ஆசிரியைகளையும் பாராட்டி வாழ்த்தினாா்.

விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் இணைச் செயலாளா் க. ஸ்ரீராகநிதி அா்த்தநாரீஸ்வரா், செயல் இயக்குநா் மற்றும் முதன்மை செயல் அதிகாரி ஆகியோரும் வாழ்த்தினா்.

படவரி...

திருச்செங்கோடு விவேகானந்தா வித்யா பவன் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்றவா்களை வாழ்த்திய தாளாளா் மு.கருணாநிதி.

X
Dinamani
www.dinamani.com