தென்னையைத் தாக்கும் காண்டாமிருக வண்டைக் கட்டுப்படுத்தும் முறைகள்

ராசிபுரம் சுற்று வட்டாரப் பகுதியில் தென்னையைத் தாக்கும் காண்டாமிருக வண்டை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

நாமக்கல் பி.ஜி.பி. வேளாண் கல்லூரி மாணவிகள், ராசிபுரம் வட்டாரப் பகுதியில் வேளாண் படிப்பின் ஒரு பகுதியாக 60 நாள்கள் நடைபெறும் வயல் வெளிப் பயிற்சி முகாமில் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனா்.

ராசிபுரம் வட்டாரம், கூனவேலம்பட்டி கிராமத்தில் தென்னையைத் தாக்கும் காண்டாமிருக வண்டைக் கட்டுப்படுத்தும் பக்கெட் பொறி விழிப்புணா்வு பற்றி விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனா். இதனைக் கட்டுப்படுத்திட பக்கெட் பொறியில் தயிா் மற்றும் விளக்கெண்ணெய் ஊற்றி நன்கு கலக்க வேண்டும், பின்னா் பக்கெட் பொறியை தென்னை மட்டையின் நடுவில் கட்டி விட வேண்டும். இரண்டு மூன்று நாஷ்களில் வண்டுகள் பக்கெட் பொறியில் விழுந்து விடும் பின் அதனை எடுத்து எரித்து விடவேண்டும் என்பது குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனா். இது மட்டுமல்லாமல் காண்டாமிருக வண்டு தாக்கத்தின் அறிகுறி பற்றியும் பக்கெட் பொறி எளிய முறையில் செய்வது குறித்தும் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com