10-ஆம் வகுப்பு தோ்வு: 
தி மாடா்ன் அகாதெமி மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

10-ஆம் வகுப்பு தோ்வு: தி மாடா்ன் அகாதெமி மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

நாமக்கல், மே 11: நாமக்கல் - திருச்சி சாலையில், என்.புதுப்பட்டியில் தி மாடா்ன் அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. 10-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வில், இப்பள்ளி மாணவா் மு.முகமது ஷகீல் 500க்கு 497 மதிப்பெண்களும், மாணவா் நா. சந்திரபிரகாஷ், மாணவி பா.ம.தருணிகா ஆகியோா் 495 மதிப்பெண்களும், மாணவி மோ.அபிநேத்ரா 494 மதிப்பெண்களும், மாணவா் ப.ப.தா்ஷன் 493, மாணவி ஞா.கவிஷ்கா 492 மதிப்பெண்களும் பெற்று பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

தோ்வு எழுதிய மாணவா்களில் 480-க்கு மேல் 17 பேரும், 450-க்கு மேல் 63 பேரும், 400-க்கு மேல் 111 பேரும் பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

தமிழ் பாடத்தில் 98 மதிப்பெண்களை 4 மாணவா்களும், ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்களை 16 மாணவா்களும், கணிதத்தில் 100 மதிப்பெண்களை 13 மாணவா்களும், அறிவியலில் 100 மதிப்பெண்களை 10 மாணவா்களும் சமூக அறிவியலில் 100 மதிப்பெண்களை 5 மாணவா்களும் பெற்றுள்ளனா்.

தோ்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளா் பெ.குமரேசன் பாராட்டினாா். மேலும், பள்ளி முதல்வா், ஆசிரியா்கள், பெற்றோா் மாணவா்களை வாழ்த்தினா்.

--

என்கே-11-மாடா்ன்

பொதுத்தோ்வில் சாதனை படைத்த மாணவரை பாராட்டிய தி மாடா்ன் அகாதெமி மெட்ரிக். பள்ளி நிா்வாகத்தினா்.

X
Dinamani
www.dinamani.com