10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் டிரினிடி அகாதெமி பள்ளி சிறப்பிடம்

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில், நாமக்கல் டிரினிடி அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

இப்பள்ளி மாணவா் டி.மோகித் 500க்கு 498 மதிப்பெண்களும், மாணவா் எஸ்.சாய்ராம் 479 மதிப்பெண்களும், மாணவி கே.பி.யோஷ்னா 476 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

பிளஸ் 2 பொதுத்தோ்வில், மாணவா்கள் சி.தயாநிதி, மே.பா.ஆகாஷ், சுதா்சனா, ச.கெளசிகா, பி.கவினா, பா.நிகிதாஸ்ரீ ஆகியோா் பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றனா். இப்பள்ளி மாணவா் தி.கவிபிரியன் கணக்கியல், வணிகவியல், பொருளாதாரம், கணினி பயன்பாடு ஆகிய பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்களை பெற்று சிறப்பிடம் பெற்றாா்.

பொதுத்தோ்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தலைவா் இரா.குழந்தைவேலு, செயலா் டி.சந்திரசேகரன், முதல்வா் எஸ்.சோமசுந்தரம், துணை முதல்வா் ஆா்.ரமேஷ் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

--

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com