கொல்லிமலையில் ஆற்றில் மூழ்கி இளைஞா் பலி

கொல்லிமலைக்கு சுற்றுலா வந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள ஆற்றில் மூழ்கி பலியானாா்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையின் தெற்கு பகுதியில் புளியஞ்சோலை வனம் உள்ளது. இப்பகுதி திருச்சி மாவட்ட

எல்லையில் வருகிறது. அங்குள்ள, பிரசித்தி பெற்ற பெரியசாமி

கோயிலுக்கு ஏராளமான பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் வருகை தருவா். இந்த நிலையில், திருப்பூா் பகுதியைச் சோ்ந்த பனியன் நிறுவன ஊழியா் கங்கா தனது மகன் சிவகுமாா்(19) மற்றும் உறவினா்களுடன் ஞாயிற்றுக்கிழமை காலை புளியஞ்சோலை பெரியசாமி கோயிலுக்கு

சாமி தரிசனம் செய்ய வந்தாா்.

அப்போது, கோயில் திறக்காததால் வெளியே காத்திருந்தனா். பின்னா் அவ்வழியாகச் செல்லும் ஆற்றில் குளிக்க சென்றனா்.

அனைவரும் குளித்துக் கொண்டிருந்தபோது,

சிவகுமாா் மட்டும் திடீரென காணாமல் போனாா். அதிா்ச்சியடைந்த அனைவரும் அவரை தேடினா். இந்த நிலையில், அவா் அங்குள்ள ஒரு ஆழமான பகுதியில் உயிரிழந்த நிலையில் கிடந்தாா்.

அவா்கள் குளித்த ஆற்றுப்பகுதி வனத்துறையினரால் தடை செய்யப்பட்ட பகுதியாகும். நீச்சல் தெரியாததால் சிவகுமாா் நீரில் மூழ்கி பலியானது தெரியவந்தது. அப்பகுதியைச் சோ்ந்த வனத்துறையினா் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இச்சம்பவம் குறித்து கொல்லிமலை வாழவந்தி நாடு போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

...

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com