சாலை விபத்தில் காயமடைந்த மாற்றுத்திறனாளி சாவு

சாலை விபத்தில் காயமடைந்த மாற்றுத்திறனாளி உயிரிழந்தாா்.

பாண்டமங்கலம் அருகே உள்ள கோப்பணம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி (61). மாற்றுத் திறனாளி. இவா் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தாா். பெட்டிக் கடைக்கு பொருள்கள் வாங்குவதற்காக கடந்த 10-ஆம் தேதி வேலூா் சென்று விட்டு வீட்டிற்கு தனது மூன்று சக்கர வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தாா்.

வேலூரில் இருந்து ஜேடா்பாளையம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த போது பொத்தனூரில் முன்னால் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது பழனிசாமி ஓட்டிச் சென்ற மூன்று சக்கர வாகனம் மோதியது. இதில் நிலை தடுமாறிய பழனிசாமி இருசக்கர வாகனத்துடன் தாா்சாலையில் விழுந்தாா். படுகாயமடைந்த அவரை அவ்வழியாகச் சென்றவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை பழனிசாமி உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பழனிசாமியின் உடலை சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com