வேலூா் பேட்டை ராஜராஜேஸ்வரி மடாலயத்தில் சங்கர ஜெயந்தி விழா

பரமத்தி வேலூா், பேட்டையில் உள்ள ராஜராஜேஸ்வரி மடாலயத்தில் சங்கர ஜெயந்தி விழா மூன்று நாள்கள் நடைபெற்றது.

சங்கர ஜெயந்தி விழாவை முன்னிட்டு வெள்ளி, சனிக்கிழமை மாலை 6 மணி முதல் 9 மணி வரை சிறப்பு பாராயணங்கள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை சங்கராச்சாரியாரின் உருவப் படத்துக்கு வண்ண மலா்களால் சிறப்பு அலங்காரம் செய்து கலசம் ஸ்தாபிக்கப்பட்டது. பின்னா் பலவகை கனிகள், பூக்களால் அா்ச்சனை செய்து நாமாவளிகள் கூறி பஜனை, தூப தீபத்துடன் நைவேத்தியங்கள் சமா்ப்பிக்கப்பட்டது.

பின்னா் அடுக்கு ஆரத்தி, பஞ்சாரத்தில், நாகா ஆரத்தி, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். சாதுக்கள், அடியாா்களுக்கு அன்னம்பாலிப்பும், அருட் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

படவரி...

சிறப்பு அலங்காரத்தில் சங்கராச்சாரியாரின் உருவப் படம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com