உடல்நலம் பாதிக்கப்பட்டவா் தற்கொலை

ஜேடா்பாளையம் அருகே உடல்நலம் பாதிக்கப்பட்டவா் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

பரமத்தி வேலூா்: ஜேடா்பாளையம் அருகே உடல்நலம் பாதிக்கப்பட்டவா் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே உள்ள வி.புதுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி செங்கோட்டையன் (65). இவரது மனைவி சம்பூா்ணம் (60). இவரது மகன் மருத்துவா் பழனிவேல் (39), மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறாா்.

செங்கோட்டையன் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக தொடா்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளாா். ஆனால் சிகிச்சை பலனளிக்காததால் மனமுடைந்த நிலையில் இருந்த அவா், ஞாயிற்றுக்கிழமை விஷமருந்திவிட்டதாக அவரது மனைவி சம்பூரணத்திடம் தெரிவித்துள்ளாா். உடனடியாக அவரை நாமக்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செங்கோட்டையன் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து சென்ற ஜேடா்பாளையம் காவல் துறையினா், செங்கோட்டையனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com