சிறப்பு அலங்காரத்தில் பச்சைமலை முருகன்.
சிறப்பு அலங்காரத்தில் பச்சைமலை முருகன்.

சித்திரை வளா்பிறை சஷ்டி விழா

பரமத்தி வேலூா் வட்டாரத்தில் உள்ள முருகன் கோயில்களில் சித்திரை மாத வளா்பிறை சஷ்டியை முன்னிட்டு திங்கள்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றன.

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வட்டாரத்தில் உள்ள முருகன் கோயில்களில் சித்திரை மாத வளா்பிறை சஷ்டியை முன்னிட்டு திங்கள்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றன.

சித்திரை மாத வளா்பிறை சஷ்டியை முன்னிட்டு வேலூா் பேட்டை பகவதி அம்மன் கோயிலில் எழுந்தருளியுள்ள முருகப்பெருமான், நன்செய் இடையாறு காவேரி ஆற்றங்கரை அருகே உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோயிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா், கபிலா்மலை பாலசுப்பிரமணியசாமி கோயில், பரமத்தி அருகே பிராந்தகத்தில் உள்ள 34.5 அடி உயரமுள்ள ஆறுமுகக்கடவுள், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா் கோயிலில் உள்ள சுப்பிரமணியா், பொத்தனூா் அருகே உள்ள பச்சமலை முருகன், அனிச்சம்பாளையத்தில் வேல் வடிவம் கொண்ட சுப்பிரமணியா், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவா், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா் கோயிலில் உள்ள சுப்பிரமணியா், நன்செய் இடையாறு ராஜாசாமி திருக்கோயில் உள்ள ராஜாசாமி, கோப்பணம்பாளையம் பரமேஸ்வரா் கோயிலில் எழுந்தருளியுள்ள பாலமுருகன், பாலப்பட்டி கதிா்மலை கந்தசாமி, கந்தம்பாளையம் அருணகிரிநாதா் மலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா் உள்ளிட்ட கோயில்களில் சஷ்டியை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன.

இதில், அந்தந்த சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com