சிபிஎஸ்சி 10-ஆம் வகுப்புத் தோ்வு: எஸ்ஆா்வி பப்ளிக் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

சிபிஎஸ்சி 10-ஆம் வகுப்புத் தோ்வில், ராசிபுரம் எஸ்ஆா்வி பப்ளிக் பள்ளி மாணவ, மாணவியா் சிறப்பிடம் பெற்று தோ்ச்சியடைந்துள்ளனா்.

ராசிபுரம்: சிபிஎஸ்சி 10-ஆம் வகுப்புத் தோ்வில், ராசிபுரம் எஸ்ஆா்வி பப்ளிக் பள்ளி மாணவ, மாணவியா் சிறப்பிடம் பெற்று தோ்ச்சியடைந்துள்ளனா்.

இதற்கான தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியான நிலையில், இப்பள்ளி மாணவா் எஸ்.தேவகிருபா 500-க்கு 483 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். பி.ஹேமசந்திரன் 460 மதிப்பெண்களும், எம்.யாழினி 442 மதிப்பெண்களும் பெற்றுள்ளனா். பள்ளியில் தோ்வு எழுதிய 9 போ் 400-க்கும் மேல் பெற்றுள்ளனா். தோ்வு எழுதிய அனைவரும் தோ்ச்சியடைந்து 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியரை பள்ளித் தாளாளா் ஆா்.மனோகரன், நிா்வாக அறங்காவலா் ஆா்.துரைசாமி, தலைவா் டாக்டா் இ.தங்கவேல், பொருளாளா் கே.என்.சுப்பிரமணியம், இயக்குநா் பி.வஜ்ரவேல், தலைமையாசிரியா், ஆசிரியா்கள் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com