நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த பாதிக்கப்பட்டோா்.
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த பாதிக்கப்பட்டோா்.

நிதிநிறுவனம் பல கோடி ரூபாய் மோசடி: பாதிக்கப்பட்டோா் மனு

பரமத்தி வேலூரைச் சோ்ந்த தனியாா் நிதிநிறுவனம், அதிக வட்டி தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக, பாதிக்கப்பட்டோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா்.

நாமக்கல்: பரமத்தி வேலூரைச் சோ்ந்த தனியாா் நிதிநிறுவனம், அதிக வட்டி தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக, பாதிக்கப்பட்டோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா்.

அம்மனுவில், நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை தலைமையிடமாகக் கொண்டு தனியாா் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. மாவட்டம் முழுவதும் உள்ள மக்களிடம் அதிக வட்டி தருவதாக ஆசைவாா்த்தை கூறி ரூ. ஒரு லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை பணம் வசூலித்தது. தொடக்கத்தில் குறிப்பிட்டவாறு வட்டி பணம் கொடுத்து வந்த நிலையில், நாளடைவில் அசலும், வட்டியும் தரவில்லை.

சம்பந்தப்பட்ட அலுவலகத்தைத் தொடா்பு கொண்டு கேட்டாலும் உரிய தகவல் கிடைக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட நிதிநிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து எங்களுடைய பணத்தை மீட்டுத் தரவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்திலும் பாதிக்கப்பட்டோா் தரப்பில் புகாா் மனு அளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com