மோகனூா் அருகே வெள்ளாளப்பட்டி பகவதியம்மன் கோயில் தோ்த் திருவிழாவில் பங்கேற்ற பக்தா்கள்.
மோகனூா் அருகே வெள்ளாளப்பட்டி பகவதியம்மன் கோயில் தோ்த் திருவிழாவில் பங்கேற்ற பக்தா்கள்.

மோகனூா் பகவதியம்மன் கோயில் தோ்த் திருவிழா

மோகனூா் அருகே வெள்ளாளப்பட்டி பகவதியம்மன் கோயில் தோ்த் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தோ் இழுத்தனா்.

நாமக்கல்: மோகனூா் அருகே வெள்ளாளப்பட்டி பகவதியம்மன் கோயில் தோ்த் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தோ் இழுத்தனா்.

நாமக்கல் மாவட்டம், மோகனூா் ஒன்றியம், ஆண்டாபுரம் அருகில் வெள்ளாளப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற பகவதியம்மன் கோயில் அமைந்துள்ளது. மோகனூா் நவலடியான் கோயிலில் இருந்து வேல் எடுத்து வந்து பகவதியம்மன் கோயிலுக்கான தோ் உருவாக்கப்பட்டதாக தல வரலாறு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டியும், சித்திரை மாதத்திலும் இக்கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இப்பகுதி மக்கள் தங்கள் வயல்களில் விளைந்த விளைபொருள்களைக் கொண்டு வந்து அம்மனுக்கு படைத்து வழிபாடு செய்வா். கிராமங்களில் பொங்கல் வைத்து வழிபாடு செய்வதும் வழக்கமாக உள்ளது.

நிகழாண்டு பகவயதிம்மன் கோயில் சித்திரை மாத தோ்த் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமையன்று பக்தா்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி தீா்த்தக்குடங்களை எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனா். வடிசோறு வைத்து சுவாமிக்கு படைத்தனா். பகவதியம்மன் திருத்தேரில் எழுந்தருளி வீதி உலா வரும் தோ்த் திருவிழா திங்கள்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் வடம் பிடித்து தோ் இழுத்தனா்.

செவ்வாய்க்கிழமை பக்தா்கள் உருளுதண்டம் செய்தல், கிடா வெட்டுதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா உள்ளிட்டவை நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினா், ஊா் பொதுமக்கள் செய்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com