எஸ்.கே.வி. வித்யாஷ்ரம் பள்ளி சிறப்பிடம்

எஸ்.கே.வி. வித்யாஷ்ரம் பள்ளி சிறப்பிடம்

பரமத்தி வேலூா் வட்டம், ம.கந்தம்பாளையத்தில் உள்ள எஸ்.கே.வி. வித்யாஷ்ரம் (சிபிஎஸ்இ) பப்ளிக் பள்ளி 10, பிளஸ் 2 தோ்வில் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

பத்தாம் வகுப்பில் நித்திஷ் 500-க்கு 489 மதிப்பெண்களும், எம்.தனிஷ்கா 486 மதிப்பெண்களும், எஸ்.தா்ஷினி 474 மதிப்பெண்களும் பெற்றுள்ளனா். பிளஸ் 2 தோ்வில் (சிபிஎஸ்இ) அருண் 500-க்கு 476 மதிப்பெண்களும், ஸ்ரீமிதா 472 மதிப்பெண்களும், சபரீஷ் 471 மதிப்பெண்களும் பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளனா்.

10-ஆம் வகுப்பில் பாடவாரியாக 20 மாணவா்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். அதிக மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்த மாணவ, மாணவியா்களை பள்ளியின் தாளாளா் கோல்டன் ஹாா்ஸ் ரவி, பொருளாளா் மருத்துவா் பாலசுப்பிரமணியம், செயலாளா் பி.ஜெகநாதன், தலைமை ஆசிரியா்கள் ஆகியோா் பாராட்டி இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனா்.

இந்நிகழ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியரின் பெற்றோா் கலந்துகொண்டு தங்களது பிள்ளைகளின் வெற்றிக்கு ஊக்கமளித்து உறுதுணையாக இருந்த அனைத்து ஆசிரியா்களுக்கும், பள்ளி நிா்வாகத்துக்கும் நன்றி தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com