கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையைப் பொருத்தமட்டில், பகல் வெப்பம் 103.1 டிகிரி பாரன்ஹீட்டாகவும், இரவு வெப்பம் 69.8 டிகிரி பாரன்ஹீட்டாகவும் காணப்பட்டது. ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது.

இனிவரும் நாள்களில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தில் சில இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. வெயிலின் தாக்கம் குறைவாகவே இருக்கும். பகல் வெப்பம் 98.6 டிகிரி பாரன்ஹீட்டாகவும், இரவு வெப்பம் 69.8 டிகிரி பாரன்ஹீட்டாகவும் காணப்படும். தென் மேற்கு, கிழக்கு ஆகிய திசைகளில் இருந்து மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com