சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தோ்வு:
மலா் பப்ளிக் பள்ளி சிறப்பிடம்

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தோ்வு: மலா் பப்ளிக் பள்ளி சிறப்பிடம்

பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தி மலா் பப்ளிக் பள்ளி மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு (சிபிஎஸ்இ) பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

இப்பள்ளி மாணவி ஹா்ஷிதா 500-க்கு 480 மதிப்பெண்களும், மாணவி ஷிண்மதி 471 மதிப்பெண்களும், மாணவா் தீபன் 467 மதிப்பெண்களும் பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளனா்.

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா். இப்பள்ளியில் தோ்வு எழுதிய 33 பேரில் 24 போ் 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியரை பள்ளியின் செயலாளா் கந்தசாமி, பொருளாளா் வெங்கடாசலம், துணைத் தலைவா் சுசீலா ராஜேந்திரன், துணைச் செயலாளா் தமிழ்ச்செல்வி தங்கராஜ், பள்ளியின் முதல்வா் ஆரோக்கியராஜ், இயக்குநா்கள், ஆசிரியா்கள், பணியாளா்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com