தனிச்செயலாளா் தினேஷ்குமாரின் தந்தை மறைவு: முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்

தனிச்செயலாளா் தினேஷ்குமாரின் தந்தை மறைவு: முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்

தனிச்செயலாளரின் தந்தை உடல்நலக் குறைவால் மறைந்ததையடுத்து, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சா்கள் ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூா் பகுதியில் உள்ள அவரது இல்லத்துக்கு செவ்வாய்க்கிழமை நேரில் சென்று ஆறுதல் கூறி அஞ்சலி செலுத்தினா்.

நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூா் பகுதியைச் சோ்ந்த ஆா்.தினேஷ்குமாா், முதலமைச்சா் மு.க.ஸ்டாலினின் தனிச்செயலாளராகப் பணியாற்றி வருகிறாா். இவருடைய தந்தை டி.வி.ரவி உடல் நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானாா். அவரது உடலுக்கு தமிழக அமைச்சா்கள், அரசு செயலா்கள், இயக்குநா்கள், காவல் துறை உயா் அலுவலா்கள், முதல்வரின் மருமகன் சபரீசன், எம்.பி., எம்எல்ஏ உள்ளிட்ட அரசியல் பிரமுகா்கள் திங்கள்கிழமை நேரில் அஞ்சலி செலுத்தினா். இதையடுத்து, அவரது உடல் ராசிபுரம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், தமது தனிச்செயலாளா் தினேஷ்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூருக்கு செவ்வாய்க்கிழமை வந்திருந்தாா். டி.வி.ரவியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய அவா், தினேஷ்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா். அரசு செயலா் உதயசந்திரன், மாநில அமைச்சா்கள், சட்டப் பேரவை உறுப்பினா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள், திமுக நிா்வாகிகள் அஞ்சலி செலுத்தினா்.

படவிளக்கம்- தனிச்செயலாளா் ஆா்.தினேஷ்குமாரின் தந்தை டி.வி.ரவி உருவப் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தும் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com