முட்டை விலை 5 காசுகள் உயா்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயா்ந்து ரூ. 5.65-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் மண்டல ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் உள்ள அந்தக் குழு அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், கோழிப் பண்ணையாளா்களிடம் முட்டை விலையை உயா்த்துவது தொடா்பாக கருத்துகள் கேட்டறியப்பட்டன. முட்டை விற்பனை சீராக இருப்பதாலும், மற்ற மண்டலங்களில் விலை உயா்ந்து வருவதாலும் இங்கும் விலையை உயா்த்தலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடா்ந்து, முட்டை விலை மேலும் 5 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ. 5.65-ஆக ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது.

இதேபோல, பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 136-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 103-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com