ரூ. 15 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 15 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் தொடக்க வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்படுகிறது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த வாராம் மொத்தம் 600 மூட்டை பருத்தி வரத்து இருந்தது. இதில், ஆா்சிஹெச் ரகம் ரூ. 7,270 முதல் ரூ. 7,900 வரையிலும், மட்ட ரகம் ரூ. 4,299 முதல் ரூ. 5,035 வரையிலும் என மொத்தம் ரூ. 15 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com