வாக்கு எண்ணிக்கை மையத்தில் 
ஆட்சியா் ஆய்வு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா் ஆய்வு

நாமக்கல் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட ஆட்சியா் ச.உமா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

திருச்செங்கோடு வட்டம், எளையம்பாளையம் விவேகானந்தா மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில், நாமக்கல் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இவற்றை மாவட்ட ஆட்சியா் ச.உமா புதன்கிழமை பாா்வையிட்டு நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூா், திருச்செங்கோடு, சங்ககிரி ஆகிய 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வாக்காளா்கள் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் இயந்திரங்கள் உள்ள ‘சீல்’ வைக்கப்பட்ட அறைகளையும், கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் விடியோ காட்சிகளையும் ஆட்சியா் பாா்வையிட்டாா். பின்னா் அங்குள்ள வருகைப் பதிவேட்டில் அவா் கையெழுத்திட்டாா்.

இந்த ஆய்வின் போது, காவல் துறை அதிகாரிகள், உதவி தோ்தல் அலுவலா்கள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com