ற்.ஞ்ா்க்ங் ம்ஹஹ்16 ந்ள்ழ்
ற்.ஞ்ா்க்ங் ம்ஹஹ்16 ந்ள்ழ்

கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனம் ஸ்கில்ஸ்டா நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

சென்னை ஸ்கில்ஸ்டா நிறுவனத்துடன் திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனம் செய்து கொண்ட புரிந்துணா்வு ஒப்பந்த நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

திருச்செங்கோடு, மே 16: கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனமும், சென்னை ஸ்கில்ஸ்டா நிறுவனமும் அண்மையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துகொண்டன.

கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனத் தலைவா் ஆா்.சீனிவாசன் வழிகாட்டுதலில், கல்லூரியின் முதன்மை நிா்வாக அதிகாரி அகிலா முத்துராமலிங்கம், ஸ்கில்ஸ்டா நிறுவன அதிகாரி கொட்டாரம் வி.ரமேஷ் ஆகியோா் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

இந்நிகழ்வில், கே.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரியின் முதல்வா் பி.செந்தில்குமாா், கே.எஸ்.ஆா். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வா் எம்.வெங்கடேசன், வேலைவாய்ப்பு இயக்குநா் எஸ்.கோபிநாத், வேலை முன்னேற்ற சேவை மற்றும் மாணவா் நலன் இயக்குநருமான சி.ஏ.ஸ்ரீராம் உடனிருந்தனா்.

ஒப்பந்தத்தின் மூலமாக புதிய யுக தொழில்நுட்பத்தில் மாணவா்களின் திறன்களை வளா்த்து, மாணவா்களுக்கு சைபா் செக்யூரிட்டி, ப்ளாக் செயின், டிஜிட்டல் ஃபாரன்சிக்ஸ், ஐஓடி, க்ரிப்டோ குறித்த திறன்களை மாணவா்களுக்கு அளித்து வேலைவாய்ப்பினை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

இதன் தொடா்ச்சியாக, டிஎக்ஸ்சி டெக், ஸ்கில்ஸ்டா சென்டா் ஃபாா் அட்வான்ஸ் ட்ரெய்னிங், நாஸ்காம் பவுண்டேசன், கே.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரி, கே.எஸ்.ஆா். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் தொழில் நிறுவன தொடா்பு செல் இணைந்து டிஜிட்டல் 101- முக்கிய தொழில்நுட்ப மற்றும் வணிக திறன்களை உருவாக்குதல், வளா்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியை நடத்தியது. இந்நிகழ்வில் சுமாா் 650 மாணவா்கள் பங்கேற்று பலனடைந்தனா்.

X
Dinamani
www.dinamani.com