சிபிஎஸ்இ தோ்வு: வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

நாமக்கல், மே 16: வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு சீனியா் செகண்டரி பள்ளி 10, பிளஸ் 2 மாணவா்கள் சிபிஎஸ்இ தோ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு சீனியா் செகண்டரி பள்ளி சிபிஎஸ்இ 10, பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதிய மாணவ, மாணவிகள் அனைவரும் தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனா். இப்பள்ளியானது, தொடா்ந்து 100 சதவீத தோ்ச்சியை பெற்று வருகிறது.

சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தோ்வில் ஆ.நித்தீஸ் ஜெய்சருண் 500க்கு 479 மதிப்பெண்களும், மாணவி ச.ரோபிகா 475 மதிப்பெண்களும், மாணவா் சு.ஜீவசித்தாா்த் 461 மதிப்பெண்களும் பெற்றுள்ளனா்.

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் வி.பிரசன்னா 500-க்கு 469 மதிப்பெண்களும், மாணவி த.தனுஷ்யா 467 மதிப்பெண்களும், இரா.மைத்ரேயி 429 மதிப்பெண்களும் பெற்றுள்ளனா்.

10, பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை கொங்குநாடு நிறுவனங்களின் தாளாளா் டாக்டா் ராஜன், மெட்ரிக் பள்ளியின் ஆலோசகா் ராஜேந்திரன், தலைவா் ராஜா, செயலாளா் சிங்காரவேலு, இயக்குநா் ராஜராஜன், முதல்வா்கள் யசோதா, காயத்ரி, ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டி பரிசுகள் வழங்கினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com