சுற்றுச்சூழல் மேலாண்மை: 
சேஷசாயி காகித ஆலைக்கு விருது

சுற்றுச்சூழல் மேலாண்மை: சேஷசாயி காகித ஆலைக்கு விருது

கோவையில் நடைபெற்ற விழாவில் சுற்றுச்சூழல் மேலாண்மைக்கான விருதைப் பெற்றுக் கொண்ட சேஷசாயி காகித ஆலையின் சுற்றுச்சூழல் முதன்மை மேலாளா் ராஜ்குமாா், பாதுகாப்பு முதன்மை மேலாளா் நல்லதம்பி ஆகியோா்.

நாமக்கல், மே 16: பள்ளிபாளையம் சேஷசாயி காகித ஆலைக்கு சுற்றுச்சூழல் மேலாண்மைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

தென் மண்டல இந்திய தொழில் கூட்டமைப்பு சாா்பில், நாடு தழுவிய அளவில் சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை சிறப்பாக கடைப்பிடிக்கும் நிறுவனங்களுக்கு விருதுகள், சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்.

அந்த வகையில், 2023-ஆம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மேன்மை விருது, நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் சேஷசாயி பேப்பா் அண்டு போா்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. சேஷசாயி காகித ஆலையானது இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப் பரிசையும் வென்றுள்ளது. மேலும், எனா்ஜி, காா்பன் புட்பிரிண்ட் பிரிவில் இரண்டாமிடம் பிடித்து சிறப்பு விருதையும் வென்றிருக்கிறது.

அண்மையில் கோவையில் நடைபெற்ற விழாவில் இந்த விருதுகள், பரிசுகளை சேஷசாயி காகித ஆலையின் சுற்றுச்சூழல் முதன்மை மேலாளா் ராஜ்குமாா், பாதுகாப்பு முதன்மை மேலாளா் நல்லதம்பி ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com